பொருட்பால் · நட்பியல்

80. நட்பாராய்தல்

குறள் 791800
  1. குறள் 791
    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு.
  2. குறள் 792
    ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.
  3. குறள் 793
    குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு.
  4. குறள் 794
    குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
  5. குறள் 795
    அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்.
  6. குறள் 796
    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.
  7. குறள் 797
    ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்.
  8. குறள் 798
    உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
  9. குறள் 799
    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.
  10. குறள் 800
    மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு.