குறள் 799 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவர் கொலைக்கு ஆளாகும்போது கூட, தனக்குக் கேடு வந்த நேரம் கைவிட்டு ஒதுங்கி ஓடிவிட்ட நண்பர்களை நினைத்து விட்டால் அந்த நினைப்பு அவரது நெஞ்சத்தைச் சுட்டுப் பொசுக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 162 · ஸ்கேன் 195 · மூலமும் சான்றும்