பொருட்பால் · நட்பியல்
79. நட்பு
குறள் 781–790
- குறள் 781செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.
- குறள் 782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு.
- குறள் 783நவில்தொறும் நூநயம் போலும் பயில்தொறும்பண்புடையாளர் தொடர்பு.
- குறள் 784நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டு.
- குறள் 785புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.
- குறள் 786முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்பு.
- குறள் 787அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு.
- குறள் 788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு.
- குறள் 789நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
- குறள் 790இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.