பொருட்பால் · படையியல்

78. படைச்செருக்கு

குறள் 771780
  1. குறள் 771
    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.
  2. குறள் 772
    கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.
  3. குறள் 773
    பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.
  4. குறள் 774
    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.
  5. குறள் 775
    விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
  6. குறள் 776
    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் நாளை எடுத்து.
  7. குறள் 777
    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
  8. குறள் 778
    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்.
  9. குறள் 779
    இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்.
  10. குறள் 780
    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.