குறள் 773 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பேராண்மை என்ப தறுகணொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆண்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் புகழப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்