குறள் 774 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசிவிட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகிறான்.
மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்