பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு

குறள் 775படைச்செருக்கு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு ஒப்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்