குறள் 772 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.
மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்