பொருட்பால் · படையியல் · படைச்செருக்கு

குறள் 771படைச்செருக்கு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

போர்க்களத்து வீரன் ஒருவன், “பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்; அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர்” என முழங்குகிறான்.

மூலம் · அச்சுப் பக்கம் 157 · ஸ்கேன் 190 · மூலமும் சான்றும்