குறள் 778 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்க்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 158 · ஸ்கேன் 191 · மூலமும் சான்றும்