பொருட்பால் · படையியல்
77. படைமாட்சி
குறள் 761–770
- குறள் 761உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.
- குறள் 762உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.
- குறள் 763ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.
- குறள் 764அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.
- குறள் 765கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை.
- குறள் 766மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
- குறள் 767தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து.
- குறள் 768அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்.
- குறள் 769சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை.
- குறள் 770நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.