பொருட்பால் · கூழியல்

76. பொருள் செயல்வகை

குறள் 751760
  1. குறள் 751
    பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்ல தில்லை பொருள்.
  2. குறள் 752
    இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.
  3. குறள் 753
    பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்எண்ணிய தேயத்துச் சென்று.
  4. குறள் 754
    அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்.
  5. குறள் 755
    அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.
  6. குறள் 756
    உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.
  7. குறள் 757
    அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்செல்வச் செவிலியால் உண்டு.
  8. குறள் 758
    குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை.
  9. குறள் 759
    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.
  10. குறள் 760
    ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.