பொருட்பால் · அரணியல்
75. அரண்
குறள் 741–750
- குறள் 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்.
- குறள் 742மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்.
- குறள் 743உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்.
- குறள் 744சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்.
- குறள் 745கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீர தரண்.
- குறள் 746எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்நல்லா ளுடைய தரண்.
- குறள் 747முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரிய தரண்.
- குறள் 748முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வ தரண்.
- குறள் 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.
- குறள் 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்ல தரண்.