பொருட்பால் · அரணியல்

74. நாடு

குறள் 731740
  1. குறள் 731
    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு.
  2. குறள் 732
    பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு.
  3. குறள் 733
    பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கிறையொருங்கு நேர்வது நாடு.
  4. குறள் 734
    உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு.
  5. குறள் 735
    பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு.
  6. குறள் 736
    கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.
  7. குறள் 737
    இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற் குறுப்பு.
  8. குறள் 738
    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
  9. குறள் 739
    நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.
  10. குறள் 740
    ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.