பொருட்பால் · அமைச்சியல்
73. அவையஞ்சாமை
குறள் 721–730
- குறள் 721வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.
- குறள் 722கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்.
- குறள் 723பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்.
- குறள் 724கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்றமிக்காருள் மிக்க கொளல்.
- குறள் 725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.
- குறள் 726வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
- குறள் 727பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஞ்சு மவன்கற்ற நூல்.
- குறள் 728பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.
- குறள் 729கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்.
- குறள் 730உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.