பொருட்பால் · அமைச்சியல்

72. அவையறிதல்

குறள் 711720
  1. குறள் 711
    அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.
  2. குறள் 712
    இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்.
  3. குறள் 713
    அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல்.
  4. குறள் 714
    ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்.
  5. குறள் 715
    நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு.
  6. குறள் 716
    ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
  7. குறள் 717
    கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்கு.
  8. குறள் 718
    உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
  9. குறள் 719
    புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்கு செலச்சொல்லு வார்.
  10. குறள் 720
    அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல்.