பொருட்பால் · அமைச்சியல்
71. குறிப்பறிதல்
குறள் 701–710
- குறள் 701கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி.
- குறள் 702ஐயப் படாஅது அகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.
- குறள் 703குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்.
- குறள் 704குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போரனையரால் வேறு.
- குறள் 705குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்.
- குறள் 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.
- குறள் 707முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.
- குறள் 708முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.
- குறள் 709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்.
- குறள் 710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்ல தில்லை பிற.