குறள் 702 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஐயப் படாஅது அகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் மனத்தில் உள்ளதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
மூலம் · அச்சுப் பக்கம் 143 · ஸ்கேன் 176 · மூலமும் சான்றும்