பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்

குறள் 703குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 143 · ஸ்கேன் 176 · மூலமும் சான்றும்