பொருட்பால் · அமைச்சியல்
70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறள் 691–700
- குறள் 691அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
- குறள் 692மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கந் தரும்.
- குறள் 693போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது.
- குறள் 694செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.
- குறள் 695எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை.
- குறள் 696குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்.
- குறள் 697வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்.
- குறள் 698இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்.
- குறள் 699கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.
- குறள் 700பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.