குறள் 693 — மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படிச் செய்து விட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.
மூலம் · அச்சுப் பக்கம் 141 · ஸ்கேன் 174 · மூலமும் சான்றும்