குறள் 695 — மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 141 · ஸ்கேன் 174 · மூலமும் சான்றும்