பொருட்பால் · அமைச்சியல்
69. தூது
குறள் 681–690
- குறள் 681அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
- குறள் 682அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று.
- குறள் 683நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு.
- குறள் 684அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.
- குறள் 685தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது.
- குறள் 686கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்க தறிவதாந் தூது.
- குறள் 687கடனறிந்து காலங் கருதி இடனறிந்துஎண்ணி உரைப்பான் தலை.
- குறள் 688தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு.
- குறள் 689விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்.
- குறள் 690இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்குறுதி பயப்பதாம் தூது.