பொருட்பால் · அமைச்சியல்
68. வினைசெயல்வகை
குறள் 671–680
- குறள் 671சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.
- குறள் 672தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்கதூங்காது செய்யும் வினை.
- குறள் 673ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்.
- குறள் 674வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்தீயெச்சம் போலத் தெறும்.
- குறள் 675பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்இருள்தீர எண்ணிச் செயல்.
- குறள் 676முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.
- குறள் 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்.
- குறள் 678வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.
- குறள் 679நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.
- குறள் 680உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற்கொள்வர் பெரியார்ப் பணிந்து.