குறள் 671 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவுதாழ்ச்சியுள் தங்குதல் தீது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந் தாழ்த்துவது தீதாக முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 137 · ஸ்கேன் 170 · மூலமும் சான்றும்