குறள் 676 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுவதற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 138 · ஸ்கேன் 171 · மூலமும் சான்றும்