குறள் 677 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 138 · ஸ்கேன் 171 · மூலமும் சான்றும்