பொருட்பால் · அமைச்சியல்

67. வினைத்திட்பம்

குறள் 661670
  1. குறள் 661
    வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற.
  2. குறள் 662
    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
  3. குறள் 663
    கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்எற்றா விழுமந் தரும்.
  4. குறள் 664
    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.
  5. குறள் 665
    வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும்.
  6. குறள் 666
    எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.
  7. குறள் 667
    உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னார் உடைத்து.
  8. குறள் 668
    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காதுதூக்கங் கடிந்து செயல்.
  9. குறள் 669
    துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.
  10. குறள் 670
    எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டா துலகு.