பொருட்பால் · அமைச்சியல்
66. வினைத்தூய்மை
குறள் 651–660
- குறள் 651துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்.
- குறள் 652என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை.
- குறள் 653ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்.
- குறள் 654இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.
- குறள் 655எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று.
- குறள் 656ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை.
- குறள் 657பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை.
- குறள் 658கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும்.
- குறள் 659அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.
- குறள் 660சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்று.