பொருட்பால் · அமைச்சியல்

65. சொல்வன்மை

குறள் 641650
  1. குறள் 641
    நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்யாநலத் துள்ளதூஉம் அன்று.
  2. குறள் 642
    ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
  3. குறள் 643
    கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.
  4. குறள் 644
    திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்பொருளும் அதனினூஉங் கில்.
  5. குறள் 645
    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
  6. குறள் 646
    வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்மாட்சியின் மாசற்றார் கோள்.
  7. குறள் 647
    சொல்லவல்லன் சோர்விலன் அஞ்சா னவனைஇகல்வெல்லல் யார்க்கும் அரிது.
  8. குறள் 648
    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிதுசொல்லுதல் வல்லார்ப் பெறின்.
  9. குறள் 649
    பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்றசிலசொல்லல் தேற்றா தவர்.
  10. குறள் 650
    இணரூழ்த்து நாறா மலரனையர் கற்றதுணர விரித்துரையா தார்.