குறள் 643 — சொல்வன்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்வேட்ப மொழிவதாம் சொல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கேட்டோரைக் கவரும் தன்மையுடையதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 131 · ஸ்கேன் 164 · மூலமும் சான்றும்