பொருட்பால் · அமைச்சியல்

64. அமைச்சு

குறள் 631640
  1. குறள் 631
    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சு.
  2. குறள் 632
    வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாண்ட தமைச்சு.
  3. குறள் 633
    பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு.
  4. குறள் 634
    தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்ல தமைச்சு.
  5. குறள் 635
    அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
  6. குறள் 636
    மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவை.
  7. குறள் 637
    செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்தியற்கை அறிந்து செயல்.
  8. குறள் 638
    அறிவிகொள் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்.
  9. குறள் 639
    பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்.
  10. குறள் 640
    முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்.