பொருட்பால் · அமைச்சியல் · அமைச்சு

குறள் 634அமைச்சு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்ல தமைச்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 129 · ஸ்கேன் 162 · மூலமும் சான்றும்