குறள் 633 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 129 · ஸ்கேன் 162 · மூலமும் சான்றும்