குறள் 632 — அமைச்சு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாண்ட தமைச்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 129 · ஸ்கேன் 162 · மூலமும் சான்றும்