பொருட்பால் · அரசியல்
63. இடுக்கண் அழியாமை
குறள் 621–630
- குறள் 621இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வ தஃதொப்ப தில்.
- குறள் 622வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும்.
- குறள் 623இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்கிடும்பை படாஅ தவர்.
- குறள் 624மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
- குறள் 625அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.
- குறள் 626அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்றோம்புதல் தேற்றா தவர்.
- குறள் 627இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்கையாறாக் கொள்ளாதா மேல்.
- குறள் 628இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்ப முறுதல் இலன்.
- குறள் 629இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்.
- குறள் 630இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு.