குறள் 629 — இடுக்கண் அழியாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்ப முறுதல் இலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்பம் வரும்பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும்பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 128 · ஸ்கேன் 161 · மூலமும் சான்றும்