பொருட்பால் · அரசியல்
62. ஆள்வினையுடைமை
குறள் 611–620
- குறள் 611அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.
- குறள் 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.
- குறள் 613தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
- குறள் 614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.
- குறள் 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.
- குறள் 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
- குறள் 617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்.
- குறள் 618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்தாள்வினை இன்மை பழி.
- குறள் 619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.
- குறள் 620ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்.