பொருட்பால் · அரசியல்

61. மடியின்மை

குறள் 601610
  1. குறள் 601
    குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்.
  2. குறள் 602
    மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டும் பவர்.
  3. குறள் 603
    மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்து.
  4. குறள் 604
    குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு.
  5. குறள் 605
    நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்.
  6. குறள் 606
    படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது.
  7. குறள் 607
    இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்.
  8. குறள் 608
    மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் ஒன்னார்க்குஅடிமை புகுத்தி விடும்.
  9. குறள் 609
    குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்.
  10. குறள் 610
    மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.