பொருட்பால் · அரசியல்

60. ஊக்கமுடைமை

குறள் 591600
  1. குறள் 591
    உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று.
  2. குறள் 592
    உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.
  3. குறள் 593
    ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்ஒருவந்தங் கைத்துடை யார்.
  4. குறள் 594
    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.
  5. குறள் 595
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய துயர்வு.
  6. குறள் 596
    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
  7. குறள் 597
    சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.
  8. குறள் 598
    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.
  9. குறள் 599
    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.
  10. குறள் 600
    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு.