பொருட்பால் · அரசியல் · ஊக்கமுடைமை

குறள் 597ஊக்கமுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல், ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்பட மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 122 · ஸ்கேன் 155 · மூலமும் சான்றும்