குறள் 599 — ஊக்கமுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும் கூர்மையான கொம்புகளுங் கொண்ட யானை, தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி நடுங்குவதுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 122 · ஸ்கேன் 155 · மூலமும் சான்றும்