பொருட்பால் · அரசியல்
59. ஒற்றாடல்
குறள் 581–590
- குறள் 581ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்.
- குறள் 582எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்.
- குறள் 583ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்.
- குறள் 584வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கனைவரையும் ஆராய்வ தொற்று.
- குறள் 585கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.
- குறள் 586துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தென்செயினுஞ் சோர்வில தொற்று.
- குறள் 587மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்று.
- குறள் 588ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
- குறள் 589ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்.
- குறள் 590சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறை.