பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்

குறள் 586ஒற்றாடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தென்செயினுஞ் சோர்வில தொற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்