பொருட்பால் · அரசியல் · ஒற்றாடல்

குறள் 587ஒற்றாடல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்