குறள் 588 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 120 · ஸ்கேன் 153 · மூலமும் சான்றும்