குறள் 585 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 119 · ஸ்கேன் 152 · மூலமும் சான்றும்