குறள் 584 — ஒற்றாடல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதார் என்றாங்கனைவரையும் ஆராய்வ தொற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 119 · ஸ்கேன் 152 · மூலமும் சான்றும்