பொருட்பால் · அரசியல்
58. கண்ணோட்டம்
குறள் 571–580
- குறள் 571கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.
- குறள் 572கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.
- குறள் 573பண்ணென்னாம் பாடற் கியைவின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்.
- குறள் 574உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்கண்ணோட்டம் இல்லாத கண்.
- குறள் 575கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்.
- குறள் 576மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.
- குறள் 577கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.
- குறள் 578கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்குரிமை உடைத்திவ் வுலகு.
- குறள் 579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
- குறள் 580பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.