பொருட்பால் · அரசியல் · கண்ணோட்டம்

குறள் 571கண்ணோட்டம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 117 · ஸ்கேன் 150 · மூலமும் சான்றும்